என்னை நானே அறிமுகம் செய்தல் - எனக்குத் தெரியாது!!!
எழுத்தும் பேச்சும் என்றென்றும் என்னைப் பிரியாது!!!
என்னைத் தேடும் ஒரு முயற்சி தான் இந்தக் குவியல் -
ஆம் - என் இன்டர்நெட் கிறுக்கல்!!!
இந்திய வழங்கிய ராடார்கள் சேதம்; இந்திய ராணுவ அதிகாரிகள் காயம்; இதற்கிடையில், அப்பாவித் தமிழக மீனவர்களின் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்களும் நின்ற பாடில்லை!!!:
இனவாத சிங்கள அரசுக்கு உதவும் என் தாய் நாட்டுத் தலைவனை, என்னென்று சொல்ல, தமிழோ செம்மொழி, தமிழரோ கிள்ளுக் கீரை... நல்ல கொள்கை!!!
உடன் பிறப்பே!!! தற்கொலை செய்து கொள்ள மின் கம்பியை தொடும் தன்மானத் தமிழனைக் காக்கத் தான் இந்த அரசு மறுவாழ்வு மின் வெட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துகிறது!!!
அய்யனே - என் அம்மா செய்த மோதகமும் நான் உன்னை வணங்க ஒரு முக்கிய காரணம் - யானை வடிவில் நீ இருக்க என்றும் உனக்குப் பிடித்ததில்லை - மதம்!!! அப்படி இருக்க உன்னை வணங்கும் சிலருக்கு ஏன் இன்னும் மத வெறி!!!