வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Tuesday, November 30, 2010

முல்லை வனத்தில் ஒரு முரட்டுப் பூ!!! முத்தமிழ் அறிஞராகவே இருந்தாலும், விதியை நொந்து கொண்டே ஆக வேண்டும், வாழ்நாளில்!!!

முல்லை வனத்தின் நடுவே, ஒரு
முரட்டுப் பூவைக் கண்டேன்...
அதன் மேல் பரிவு கொண்டே
நானும், நீரை ஊற்றி வளர்த்தேன்...
"சேற்றின் நடுவே மலர்ந்த,
செந்தாமரை நீ" என்று...
என் தோட்டம் கொணர்ந்து, அதனை
அரியணை ஏற்றிப் பார்த்தேன்!!!
ஓய்ந்து விழும் போதெல்லாம்,
என்னைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி...
அப் பூவிற்குன்டென்று எண்ணி, என்
அருகில் வைத்துக் கொண்டேன்!!!
பூவும் செடியொடு வளர்ந்தது, அதன்
வேரைப் பரப்பிக் கொண்டது...
முட்கள் கொஞ்சம் அதிகம், "சரி,
இயல்பே" என்று பொருத்தேன்!!!
பாலைக் கக்கும் போது, மூலிகை
என்று நினைத்தேன்... இன்றோ,
விஷமாய்த் திறிந்து அதுவும்,
வேரடி மண்ணைத் தின்றும் -
கிளைகள் பலவாய்க் கொண்டும்...
விருச்சமாய் வளருதே, அந்தோ!!! என்
தோட்டத்தையே விழுங்கும் அளவு...
அதை செழிக்க விட்டேனே, ஐயோ!!!
யானோ அரசன்? யானே கள்வன்!!!

- கலைபிரியன்

Sunday, November 28, 2010

இனாவானாக்கள்...

கரை படியாத கைக்குச் சொந்தக்காரர்கள் - காமன் வெல்த் ஊழல் புரிந்தவர்கள்...
ஆதர்ஷ புருஷர்கள் - ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் புரிந்தவர்கள்...
அக்கறை மிக்கவர்கள் - அலைக்கற்றை ஊழல் புரிந்தவர்கள்...
வீர தீரர்கள் - வீட்டுக் கடன் ஊழல் புரிந்தவர்கள்...
நினைவில் நிற்பவர்கள் - நில மோசடி புரிந்தவர்கள்...
இவர்களை நம்பியே - இன்றைய ஜனநாயகம்!!!
இனாவானாக்கள் - இந்தியக் குடிமக்கள்!!!

- கலைபிரியன்

Friday, November 26, 2010

தேவர் மகன் சிவாஜி வசனம்!!! விதை அவன் போட்டது... அவன் மகன் பழம் சாப்பிட்டான்... அடுத்து, அவன் மகன்... ஆனால் விதைச்சது - அவன்!!!

உலகம்
உருண்டையென்று
உரக்க
உரைத்திட்டான்...
உளறல் என்று
ஊர் பேசியது...
உண்மை
உணர்ந்த பொது...
உரைத்தவன்
உயிரோடில்லை!!!

- கலைபிரியன்

Wednesday, November 24, 2010

அரசியலை ஆக்கிரமித்திருக்கும் விந்தை மனிதர்கள் - இன்றைய ஜனநாயக அவலம்...

நாத்திகம் மற்றும் பகுத்தறிவு - இச்சொற்கள் இரண்டும் திரிக்கப்பட்டு தேவையில்லாத விதண்டாவாதம் செய்ய மட்டுமே இன்றைய நிலையில் பயன்படுத்தப் படுகின்றன. இறை நம்பிக்கை மற்றும் மூட பழக்க வழக்கங்களில் நம்பிக்கை இல்லாதவர்களை, நாத்திகர்கள் என்று அழைப்பது தவறு. அவர்கள் ஏதோ அழிவை நோக்கி பிரச்சாரம் செய்கின்ற சக்திகளாக சித்தரிக்கப் படுவதைக் கண்களை மூடிக் கொண்டு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவர்களுடைய சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு வைக்கப் படும் வேட்டாகும். அதே சமயம், பகுத்தறிவு வாதம் என்பதை, இன்னொரு சாரார், ஏதோ, எதையும் பகுத்து அறியக்க் கூடிய திறமையும் தன்மையும் அற்றவர்கள் என்று பொருள் படுகிற வகையில் பேசித் திரிவதும் ஆரோக்கியமாக அமையாது என்பதும் உண்மை. பெரியார் எவ்வளவோ சமூக முற்போக்கு சிந்தனை மிகுந்த திராவிடம் பிறக்க மூல காரணமாக இருந்தார் என்பதை எப்படி யாராலும் மறுக்க முடியாதோ, இராஜாஜி, தனது பார்வைக்கு வந்த அனைத்து விடயங்களையும் பகுத்து அறிந்து செயல்பட்ட உன்னதமான, நிர்வாகத் திறன் கொண்ட தலைவர், என்பதையும் யாராலும் எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அவர்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் எவ்வளவு ஆரோக்யமான நட்பையும், ஒருவர் பால் ஒருவர் அளவு கடந்த மரியாதையையும், அன்பையும் வைத்திருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அவர்கள் காலத்து அரசியல் ஆரோக்கியமாகவும் மதிக்கத் தக்கதாகவும் திகழ்ந்ததற்கு அவர்களைப் போன்ற அறிய தலைவர்கள் இருந்தது ஒரு காரணம். அவர்கள் வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும், இன்றைய இளைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் தலைவர்கள் யாவரும், இந்தச் சொற்களையும் கருத்துக்களையும், தங்கள் வசதிக்கேர்ப்பத் திரித்துக் கொண்டு ஊழல் மலிந்த வோட்டுப் பொறுக்கும் அரசியலுக்குப் பயன்படுத்துவது வேதனையிலும் வேதனை. மக்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும், பழம் பெரும் தலைவர்களையும் அவர்களுடைய கருத்துக் களையும் மேற்கோள் காட்டும் இவர்கள், ஏனோ தங்கள் நடைமுறையில் மட்டும், அக்கருத்துக்களை ஒதுக்கி வைப்பது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கின்றது. மக்கள், தங்கள் கையில் இருக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பயன் படுத்தி, இது போன்ற தீய சக்திகளுக்கு சாவு மணி அடிக்காத வரையில், இன்று நாம் கண்டு கொண்டிருக்கும் ஜனநாயக அவலங்கள் தொடர் கதையாகவே போய் விடும். சிந்திப்பார்களா மக்கள்?

- கலைபிரியன்

Monday, November 22, 2010

சாவில்லா வரம் - தமிழக அரசு!!!

உடன் பிறப்பே!!! தற்கொலை செய்து கொள்ள
மின் கம்பியை தொடும் தன்மானத் தமிழனைக்
காக்கத் தான் இந்த அரசு மறுவாழ்வு மின் வெட்டுத்
திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துகிறது!!!

சிந்திப்பீர் செயல் படுவீர்...

மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...

கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...

பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...

கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...

இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...

ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...

கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...

அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...

இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...

என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...

அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...

யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...

உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...

இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...

இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...

மே பத்து - "உலக வரி ஏய்ப்பு தினம்"

அரவணைக்க அருகில் இல்லை நீ...
ஆனால், துணைக்கு தினமும் வருகிறாய்...

அட்சய த்ரிதிக்கு செய்கூலி சேதாரம் இல்லை... உன்
அன்புக்கோ விலை மதிப்பில்லை.

மே பத்தாம் தேதி "உலக வரி ஏய்ப்பு தினம்" - ஆம்...
நீ கொடுத்த அன்புக்கு வரி கட்டவில்லை எவனும் இன்னும்...

எங்கள் சுகத்துக்கு உன் துக்கம் மறந்தாய்...
எங்கள் நிம்மதிக்கு உன் தூக்கம் தொலைத்தாய்.

ஒவ்வொரு ஆத்திகனும் போற்றுகின்ற பெரியார் நீ...
ஒவ்வொரு நாத்திகனும் கற்கின்ற கடவுள் நீ...

உன் கோபம் - கொட்டுகின்ற தேள் அல்ல, மீட்டுகின்ற விரல்...
உன் குட்டு - "சுறுக்"கென்ற வலி இல்லை, செதுக்குகிற உளி...

மீட்டாமல் இசை வருவதில்லை வீணையிலிருந்து...
உன் கண்டிப்புத் தான் எங்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறது...

செதுக்காமல் வடிந்து விடுவதில்லை சிற்பம்... உன்
அக்கறை இல்லாமல் நாங்கள் வெறும் படிக் கற்கள் - சொற்பம்...

இந்நாளில் உன்னை வாழ்த்துவதைக் கூடக் கடமையாய்
எண்ணியிருக்கிறோம் - எங்களில் பலர்...

இனி வருடமெல்லாம் "அன்னையர் தினம்" ஆக இருந்தாலும் -
வரி ஏய்ப்பிலிருந்து தப்ப முடியாது எங்களால்!!!

தேர்தல் - எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்...

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"ன்ற கதையாக, "நாங்களும் வாக்களித்தோம்"னு சொல்லிக் கொள்கிற பொது ஜனத்தைத் தான் இன்றைக்குக் காண முடிகிறது...

நாம் வாக்களித்த வேட்பாளர் எவராவது ஒருவர், என்றாவது ஒரு நாள், தான் சொன்னதை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்று புள்ளி விவரத்துடன் வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்ததுண்டா? அல்லது வாக்காளர்கள் தான் அவர்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு சிரமங்கள் எடுத்ததுண்டா?

போகிற போக்கில், காற்றில் கப்பல் விடுவேன் என்றும் கேப்பையில் இருந்து நெய் எடுப்பேன் என்றும் சொன்னால் கூட நமது வாக்காளர்கள் வாக்களித்து வெற்றிக் கனியை அவர்கள் தத்தம் தலைமையின் காலில் சமர்ப்பிதுவிதுவிட்டு வாக்களித்த நம்மையே சுரண்டக் கிளம்பிவிடுவார்கள்... இது தான் ஜனநாயக மரபு என்றே நம்மை இக்காலத் தலைவர்களும் நம்ப வைத்தும் விட்டார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க கூட திருவாளர் பொது ஜனங்களுக்கு நேரமும் இருப்பதில்லை...

செய்தித் தாள்களைப் புரட்டி, உலக நடப்பு தெரிந்து, இவ்வளவு காலம் நடந்ததை திரும்பிப் பார்க்க நேர்ந்தால், இவைகளெல்லாம் பொது ஜனங்களுக்குப் புலப் படும்:

1. குற்றப் பின்னணி உடையவர்கள் எந்தனை பேரைத் வெற்றி பெற வைத்துள்ளோம்?
2. ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரிடம் ஏமார்ந்துள்ளோம்?
3. சபையில் நமக்காக ஒரு கேள்வி கேட்கக் கூட நேரமில்லாமல் உழைத்தே ஓடாய்த் தேய்ந்து போன (யாருக்காக?) எத்தனை பேரை மறுபடி வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்?
4. கொள்கையும் கட்சியும் மாறி மாறி நம்மிடம் மறுபடி மறுபடி வாக்குப் பெற வரும் எத்தனை பதவி வெறியர்களை நாம் தாங்கிப் பிடித்துள்ளோம்?
5. வெற்றி பெறுவதற்கு முன்னும் வெற்றி பெற்ற பின்னும் இவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களை ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துகிறார்கள்?
6. கட்சித் தலைமைக்குக் காட்டுகின்ற விசுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காட்டுகிறார்களா இவர்கள்?
7. காமராஜர் வழி, கக்கன் வழி வந்ததாகக் கூறும் இவர்களில் எத்தனை பேர் சுயநலத்தை விடப் பொது நலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
8. பொது மருத்துவமனையில் இவர்களில் எவ்வளவு பேர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெறுகிறார்கள்? அரசு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? அரசு பள்ளிகளில் எவ்வளவு பேரின் குழந்தைகள் பயிலுகிறார்கள்? இதற்கெல்லாம் பதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க, இவர்களில் எத்தனை பேருக்கு மக்களுக்கு சேவை ஆற்றுகின்ற மனப் பக்குவம் வரும்?
9. இவர்களில் எத்தனை பேர் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள்?
10. தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை இவர்களில் யாராவது பத்திரமாக எழுதித் தரத் தயாரா?

குறிப்பு - இந்தக் கேள்விகள் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ சாராரையோ மனதில் வைத்துத் தொகுக்கப் பட்டவை அல்ல. இதற்காக என்னைச் சாடும் பொழுதாவது பேதம் பார்க்காமல் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பார்களே எனில், அதை என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன்...

இவற்றை விட இன்னும் எவ்வளவோ கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்க, இதோ இந்தத் தேர்தலும் வந்து இவற்றுக்கு நல்ல பதில்கள் கிடைக்காமலேயே விடை பெறவும் போகிறது... எத்தனை பேர் இன்னும் "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"னு சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை!!!

Sunday, November 21, 2010

தண்ணீரின் உணர்வுகள்!!!

நீ(ர்) - பஞ்ச பூதங்களில்
வணங்குதற்குரிய பாகம்!!!
மழை - தண்ணீரின் முகம்!!!
வெள்ளம் - தண்ணீரின் அதி வேகம்!!!
வறட்சி - தண்ணீரின் சோகம்!!!
சுனாமி - தண்ணீரின் கோபம்!!!
பசுமை - தண்ணீரின் இனிமை!!!
தூய்மை - தண்ணீரின் பெருமை!!!
குளம் - தண்ணீரின் பொறுமை!!!
ஆறு - தண்ணீரின் இளமை!!!
அருவி - தண்ணீரின் ஆசி!!!
கடல் - தண்ணீரின் முழுமை!!!
மொத்தத்தில் - நீ(ர்) பெருகி வந்தால்
நேரும் தாக்கம்!!! நீ
இல்லை என்றால் பெரும் ஏக்கம்!!!
மும்மாரி பொழிய வேண்டும் என்பதே,
எங்கள் நோக்கம்!!!

பாவாக்கம் - செ. இந்திரா (My sister)

Saturday, November 13, 2010

என்ன அழகு, எத்தனை அழகு!!!


ஆங் சன் சூ க்யி

மக்களுக்காய்ப் போராடி, மனிதம் வென்றெடுக்க -
மலையே எதிர் வரினும்
மல்லுக்கு நின்ற நீ - ஒரு
மாதர் குல மாணிக்கம்
மங்காத ஒளி விளக்கு...

சர்வாதிகாரிகளை, சம்ஹாரம் செய்திடவே...
சமதர்ம நெறி ஓதி...
சத்தியம் போதிப்பாய் -
சட்டத்தின் ஆட்சி தனை,
சமைத்திடவே வழி செய்வாய்...

காந்தியின் பெண்ணுருவே, கண்மணியே -
விடுதலை ஆகி வந்த, வின் வெளியின்
வெண்ணிலவே - வெளிச்சம் நீ
உதிர்த்திடுவாய்... உன்
மக்கள் வாழ்ந்திடவே...

பகோடாவின் பொக்கிஷமே, மியன்மாரின்
மின்சாரமே - பருவ மங்கையரைக்
காட்டிலும் நீ - பன்மடங்கு அழகன்றோ!!! உன்
உள்ளத்தின் உயரத்தை,
அளப்பதற்கும் வழியுண்டோ...

பர்மாவின் அமைத்க்காய் - உன்
வாழ்வின் பாதி தனைப் பலி
கொடுத்தாய் - பல்லாண்டு நீ
வாழ - இயற்கை இனி
வழி விடட்டும்...

- கலை பிரியன்

Monday, November 8, 2010

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!!!

வேக வேகமாக டையை சுற்றிக் கொண்டு, லேப்டாப்பைப் பற்றிக் கொண்டு, காரை நோக்கிச் சென்றான் நிகில். மனதுக்குள் "மணி ஆறரை ஆகுது, நிதானமாகப் போனாலே ஏழு மணி ட்ரெய்னைப் புடிச்சுடலாம்..." என்று சொல்லிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான். அன்றைய ஷேர் மார்க்கெட் செய்திகளில் மூழ்கிக்கொண்டே, மனதில் பலவாறான கணக்கு ஓடிக் கொண்டிருக்க, சீராகப் பயணித்துக் கொண்டிருந்தது கார்.

அவனையும் அறியாமல், வேகம் அதிகரித்து, ஸ்பீட் லிமிட் தாண்டி விட, பின்னால், சைரன் ஓசையுடன், போலீஸ் காரர் வண்டியை நிறுத்தினார். சட்டென்று இவ்வுலகத்துக்கு மீண்டு வந்து, தலையில் அடித்துக் கொண்டே வண்டியை நிறுத்தினான். லைசென்சை வாங்கிப் பார்த்து, பத்து நிமிட நேரம் யாருடனோ வாக்கி டாக்கியில் அளவளாவி விட்டு, டிக்கெட் கிழித்து நீட்டினார். எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ரோபோட் மாதிரி சொன்னதையே திருப்பி சொல்லிவிட்டு, மெதுவாகப் போகச் சொல்லி அறிவுறுத்திவிட்டுக் கிளம்பினார். நிகில் தன் விதியை நொந்த படியே, மெதுவாக வண்டியைச் செலுத்தினான்.

ஸ்டேஷனில் பார்க் செய்யும் போது மணி ஏழு பத்து. ஏழரை மணி வண்டிக்காகக் காத்திருந்தான். அறிவிப்புப் பலகையில் ஓடியதைப் பார்த்து முகம் சுளித்தான். யாரோ ரயில்வே ட்ராக் குறுக்கே விழுந்ததால் ஏழரை வண்டி விபத்து ஏற்பட்டு விட, 20 நிமிடம் தாமதம் என்று வந்தது. "தற்கொலை செய்து கொள்ள, இவனுக்கு, திங்கள் கிழமை காலை, அதுவும், நம்ம வண்டி தானா கிடைச்சுது. ச்சை. நம்ம நேரம் இன்னைக்கு சரியே இல்லை" என்று நொந்து கொண்டே போனில் ஈமெயில்களைப் புரட்டினான். சற்று நேரத்தில் "பேட்டரி டவுன்" என்று அதுவும் பல்லை இளித்தது. போனை அமர்த்தி விட்டு சற்றே கண் அயர்ந்தான்.

எட்டு மணி ஆனது, மெதுவாக எட்டிப் பார்த்தது அவன் காத்திருந்த ஏழரை மணி வண்டி. அதில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்க வசதியாக சாய்ந்து கொண்டான். ஐ பாட் இருக்கும் நினைவு அப்போது தான் வந்தது. ஆன் செய்து காதில் மாட்டிக் கொண்டான். "Autograph" பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது.

"எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயம் இல்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயம் எல்லாம், மறந்து போகும் மாயங்கள்..."

எவ்வளவு யதார்த்தமான வாக்கியம். நினைவலைகளில் மிதக்கத் தொடங்கினான் நிகில். இன்று காலை நடந்த விஷயங்களை விட, மிக மிக கொடூரமான பல திருப்பு முனைகள் அவன் வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக நடந்தேறியிருக்கின்றன. அவ்வளவும் அவன் கனவில் தோன்ற, கண்ணயர்ந்து உறங்கிப் போனான், அவற்றை அசை போட்டுக் கொண்டே. கழுத்திலே மாதாந்திர டிக்கெட்டைத் தொங்க விட்டுக் கொண்டே அவன் அசந்து தூங்கியதால், டிக்கெட் பரிசோதகரும் அவனை எழுப்பாமல் தன் வேலையைத் தொடர்ந்தார்.

ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், வாஷிங்டன் நகரத்தின் மையப் பகுதியில் தன்னுடைய கடைசி நிறுத்தத்தில் ஒரு பெரிய "க்ரீச்" சத்தத்துடன் நின்றது ட்ரெய்ன். தூக்கம் களைந்து எழுந்த நிகில், அங்குள்ள வாஷ் ரூம் சென்று, முகம் கழுவி விட்டு, நடக்கத் தொடங்கினான். ஏனோ பலவாறான எண்ணம் ஓடிக் கொண்டிருந்ததால், நடையில் ஒரு விதமான தளர்வு.

ஐ பாட் அடுத்த பாடலுக்குத் தாவியது, "எந்திரன்" படத்திலிருந்து...

"புதிய மனிதா... பூமிக்கு வா..."

கேட்டு கொண்டே பாடலில் ஆழ்ந்த நிகில், நடையில் துள்ளலும் சேர்ந்து கொண்டது... தனக்குள்ளே சத்தமாக ஓலித்துக் கொண்டான்... "ஆம், இன்று புதிய நாள்... இதுவும் கடந்து போகும்"!!

- கலை பிரியன்