
ஷ்... அப்பப்பப்பப்பப்ப்பா... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலைப்பா... சும்மா நொச்சு நொச்சுன்னு... சொல்ரா, கப்ளிங் தலையா...
பேப்பர் பாத்திங்களா...
இன்னும் இல்லடா, என்ன போட்ருக்கு, கொண்டா...
நம்ம பண்ணையாரு மவன் பழனில பிட் அடிச்சு பாஸ் பண்ணிட்டாராம்...
என்னது, அவரு வடக்கத்திலேயில்ல எங்கயோ படிக்குராப்ல... அப்புடியே இருந்தாலும், அவரு பிட் அடிச்சு பாஸ் பண்ணதெல்லாம் ஒரு நியூஸா வருதா?
இந்தோ, இங்க தான்... பாருங்க, படமெல்லாம் குட போட்ருக்கு...
இர்ரா, மூஞ்சில கடிச்சு வச்சுடாத... படிக்குறேன்... அடப் பாவி... இதுக்குதான், மழைக்காவது பள்ளிக் கூடத்துப் பக்கம் ஒதுங்கணுங்குறது...
அண்ணே, இப்படியெல்லாம் கேவலமா பேசாதிங்க, நாங்க எசுகேடட் பேமிலி...
என்னது, எச்சக்கல பேமிலியா?
என்ன தான் இருந்தாலும், நான் ரெண்டாப்பு பாசண்ணே... நீங்க பத்தாப்பு பெயிலு... நியாபகம் வச்சுக்குங்க...
டேய்... ஒன்கிட்ட எல்லாம், பேசி... ப்ச்....... ஐய்ய்ய்யோ... ராமா... ஏன் இந்த கழுசடப் பசங்கக்கிட்ட எல்லாம் என்னயப் பேச வைக்குர...
அது போகட்டும்ண்ணே, பாசு பாசு தான், பெயிலு பெயிலு தான்... பேப்பர்ல என்ன போட்ருக்கு, படிச்சீங்களா...
ஒன்னயெல்லாம் திருத்தவே முடியாது... டேய், அவரு "பிட்ஸ் பிலானி"ங்குற காலேஜுல படிச்சு நெறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணி இருக்காருண்ணு போட்ருக்குடா... நீ சொன்னா மாதிரிப் போயி ஊருக்குள்ள சொல்லிக்குட்டு திரியாத... ஒன்னோட ஆப் பாயில் வாய தச்சு வச்சுருவாணுவ...
இப்புடி வெவரமா சொல்லுங்க, அப்பத் தானே புரியும்...
ஒன்னயச் சொல்லி குத்தமில்லடா, தண்டோராத் தலையா... புள்ளைங்கள படிக்க வையுங்க படிக்க வையுங்கன்னு அந்த வாத்தி, வந்த நாளா, ஊருக்குள்ள கரடி மாதிரி கத்திக்குட்டு திரியுறான்... ஒரு பய கேக்குறது இல்ல... புள்ளைங்கள படிக்க வைக்காட்டி இலவச டிவி இல்லைன்னு சட்டம் கொண்டாறோனும்... அப்பத் தான் திருந்துவாங்க நம்மூரு ஜனங்க...
அண்ணே, படிச்சா ஏம்போட்டோ கூட பேப்பர்ல வருமாண்ணே...
டேய்... ஓடிப் போயிரு, இல்லாட்டி க்ரீச காச்சி வாயில ஊத்தீருவேன்...
- கலைபிரியன்
(Making it a series due to popular demand - look out for the next part soon and check out previous part @ http://kalaipiriyan.blogspot.com/2010/12/blog-post.html)
3 comments:
haha hilarious!
Nice One Ram... Keep going
Post a Comment