
என்னடா, காலங்காத்தால, நொண்ணே, நொண்ணே... என்ன - பன்னி வறுத்துக் கொண்டாந்துருக்கியா?
இல்லண்ணே, காலைல பேப்பர் படிச்சதிலேருந்து மண்டையக் கொடையுதுண்ணே... ஒரே சந்தேகம்... அத்தான், பாத்து கிளியர் பண்ணிட்டுப் போகலாம்னு...
ரைட்டு... ரைட்டு... என்ன மாதிரி புத்திசாலின்னு இருந்தா இப்புடிப் பட்ட சந்தேகமெல்லாம் வர வேண்டியதான்... அது சரி, அதெல்லாம் மூளையுள்ளவனுக்கு தானே வரும்... நீ தான் ஹாலோ மண்டையனாச்சே... ஒனக்கெல்லாம் எப்பிடி...
பாத்திங்களா, தேடி வந்தா, கிண்டல் பண்றிங்களே...
சரி, நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே - சொல்றா ஐஸ் ப்ரூட் வாயா...
இத்தனை நாளா வெறும் கொல, கொள்ளனு மட்டும் தான் வந்துக்கிட்டிருந்துச்சு... இப்ப என்னமோ ஊழல் ஊழல்ன்னு வந்துக்குட்டிருக்கே... அப்புடின்னா என்னண்ணே?
அதுவாடா தீச்சட்டி தலையா? போன வருஷம் உன்கிட்ட 1000 ரூபா குடுத்து வோட்டுக் குத்தச் சொன்னான்ல ஒருத்தேன்?
ஆமாண்ணே, நான் கூட அவன் சொன்னா மாதிரி பூத்துக்கு போய் அவன் சொன்ன மிசின்ல குத்தி, அந்த மிசின் ஒடஞ்சு போச்சு... அங்க உக்காந்து மை தடவிக்கிட்டிருந்த நம்ம வாத்தியாரு என் மண்டைல அடிச்சு பத்திவுட்டாரு...
அடப் பாவி, உன்கிட்ட கொஞ்சம் சூதானமா இருக்கனும்டா...
சரி விஷயத்துக்கு வாங்கண்ணே... அவனுக்கு என்ன?
அவன மாதிரி 234 பயலுவ, ஜெயிச்சு, பாரிஸ் கார்னர்ல கொடி கட்டுன பில்டிங்குக்கு போய், கலாட்டா ரகளை எல்லாம் பண்ணுவானுவ...
அத்தான், அந்த கட்டடத்த LIC பில்டிங் பக்கத்துல மாத்திட்டேங்களே?!
அட கருவாப் பயலே, அது எப்படா ஒனக்கு தெரியும்?
நம்மூரு பூசாரி மெட்ராஸ் போயிட்டு வந்தாருல்ல, அவரு சொன்னாரு...
பரவாயில்லயேப்பா, அவன ஒரு இத்துப் போன பயன்னு நெனைச்சேன்... இவ்வளவு மேட்டர் வச்சுருக்கானா அவன்... சரி கெடக்குது கழுத, நம்ம விஷயத்துக்கு வருவோம்... இதே மாதிரி, 39 பேரு தமிழ் நாட்லேருந்து டில்லிக்கு போய் மத்த ஊர்லேருந்தெல்லாம் வர்ற இன்னொரு ஐநூத்திச் சொச்சம் பேரோட கலாட்டா ரகளை எல்லாம் பண்ணுவானுவ...
கலாட்டா ரகளையெல்லாம் பண்ணுனா போதுமா, வயித்துப் பாட்டுக்கு என்ன செய்வாங்கண்ணே?
அடங்கொண்ணியா, கரெக்டா கவ்விட்ட பாத்தியா... ஒன்ன மாதிரி ஈத்த பீத்த பயலுவளுக்கெல்லாம் குடுத்த ரூவாய எல்லாம் வசூல் பண்ணோனும்ல, அதுனால, ரோடு போடற காண்ட்ராக்டு, பஸ் ஸ்டாண்டு கட்டுரது, கரண்டு கம்பம் நடுறது, தூரு வார்றது, தண்ணி கனக்ஷன் குடுக்குறது, லைசன்ஸ் குடுக்கறதுல ஆரம்பிச்சு பத்திரம் பதியுறது வரைக்கும்... எல்லா விஷயத்துக்கும், கண்டிஷனா கமிஷன் வாங்குரானுவ, கம்மினாட்டி பயலுவ... இது தாண்டா ஊழல். புரியுதா?
புரியுதுண்ணே, ஆனா, பப்ளிக் கக்கூஸ் கட்டுரத விட்டீங்களே?
அட நாறப் பயலே... எவ்வளவு சொன்னாலும் அதத் தாண்டி ஒனக்கு ஒரு எழவும் வெளங்க மாட்டேங்குதே... ஆமா, நீ என்ன பண்ணுவ - அதுலயும் சேத்து தானே ஊழல் பண்றானுவ...
இப்ப நல்லாப் புரியுதுண்ணே... இதெல்லாம் ஒழியனும்னா என்னண்ணே பண்ணனும்?
மொதல்ல போய் பல்லைத் தேயுடா... நீயும் நானும் என்ன ஐநா சபையா, இதப் பேசிப் பைசல் பண்றதுக்கு?
- கலைபிரியன்
1 comment:
so nice...artical
Post a Comment