
முரட்டுப் பூவைக் கண்டேன்...
அதன் மேல் பரிவு கொண்டே
நானும், நீரை ஊற்றி வளர்த்தேன்...
"சேற்றின் நடுவே மலர்ந்த,
செந்தாமரை நீ" என்று...
என் தோட்டம் கொணர்ந்து, அதனை
அரியணை ஏற்றிப் பார்த்தேன்!!!
ஓய்ந்து விழும் போதெல்லாம்,
என்னைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி...
அப் பூவிற்குன்டென்று எண்ணி, என்
அருகில் வைத்துக் கொண்டேன்!!!

வேரைப் பரப்பிக் கொண்டது...
முட்கள் கொஞ்சம் அதிகம், "சரி,
இயல்பே" என்று பொருத்தேன்!!!
பாலைக் கக்கும் போது, மூலிகை
என்று நினைத்தேன்... இன்றோ,
விஷமாய்த் திறிந்து அதுவும்,
வேரடி மண்ணைத் தின்றும் -
கிளைகள் பலவாய்க் கொண்டும்...
விருச்சமாய் வளருதே, அந்தோ!!! என்
தோட்டத்தையே விழுங்கும் அளவு...
அதை செழிக்க விட்டேனே, ஐயோ!!!

- கலைபிரியன்
No comments:
Post a Comment