
ஆங் சன் சூ க்யி
மக்களுக்காய்ப் போராடி, மனிதம் வென்றெடுக்க -
மலையே எதிர் வரினும்
மல்லுக்கு நின்ற நீ - ஒரு
மாதர் குல மாணிக்கம்
மங்காத ஒளி விளக்கு...
சர்வாதிகாரிகளை, சம்ஹாரம் செய்திடவே...
சமதர்ம நெறி ஓதி...
சத்தியம் போதிப்பாய் -
சட்டத்தின் ஆட்சி தனை,
சமைத்திடவே வழி செய்வாய்...
காந்தியின் பெண்ணுருவே, கண்மணியே -
விடுதலை ஆகி வந்த, வின் வெளியின்
வெண்ணிலவே - வெளிச்சம் நீ
உதிர்த்திடுவாய்... உன்
மக்கள் வாழ்ந்திடவே...
பகோடாவின் பொக்கிஷமே, மியன்மாரின்
மின்சாரமே - பருவ மங்கையரைக்
காட்டிலும் நீ - பன்மடங்கு அழகன்றோ!!! உன்
உள்ளத்தின் உயரத்தை,
அளப்பதற்கும் வழியுண்டோ...
பர்மாவின் அமைத்க்காய் - உன்
வாழ்வின் பாதி தனைப் பலி
கொடுத்தாய் - பல்லாண்டு நீ
வாழ - இயற்கை இனி
வழி விடட்டும்...
- கலை பிரியன்
No comments:
Post a Comment