வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, November 24, 2010

அரசியலை ஆக்கிரமித்திருக்கும் விந்தை மனிதர்கள் - இன்றைய ஜனநாயக அவலம்...

நாத்திகம் மற்றும் பகுத்தறிவு - இச்சொற்கள் இரண்டும் திரிக்கப்பட்டு தேவையில்லாத விதண்டாவாதம் செய்ய மட்டுமே இன்றைய நிலையில் பயன்படுத்தப் படுகின்றன. இறை நம்பிக்கை மற்றும் மூட பழக்க வழக்கங்களில் நம்பிக்கை இல்லாதவர்களை, நாத்திகர்கள் என்று அழைப்பது தவறு. அவர்கள் ஏதோ அழிவை நோக்கி பிரச்சாரம் செய்கின்ற சக்திகளாக சித்தரிக்கப் படுவதைக் கண்களை மூடிக் கொண்டு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவர்களுடைய சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு வைக்கப் படும் வேட்டாகும். அதே சமயம், பகுத்தறிவு வாதம் என்பதை, இன்னொரு சாரார், ஏதோ, எதையும் பகுத்து அறியக்க் கூடிய திறமையும் தன்மையும் அற்றவர்கள் என்று பொருள் படுகிற வகையில் பேசித் திரிவதும் ஆரோக்கியமாக அமையாது என்பதும் உண்மை. பெரியார் எவ்வளவோ சமூக முற்போக்கு சிந்தனை மிகுந்த திராவிடம் பிறக்க மூல காரணமாக இருந்தார் என்பதை எப்படி யாராலும் மறுக்க முடியாதோ, இராஜாஜி, தனது பார்வைக்கு வந்த அனைத்து விடயங்களையும் பகுத்து அறிந்து செயல்பட்ட உன்னதமான, நிர்வாகத் திறன் கொண்ட தலைவர், என்பதையும் யாராலும் எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அவர்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் எவ்வளவு ஆரோக்யமான நட்பையும், ஒருவர் பால் ஒருவர் அளவு கடந்த மரியாதையையும், அன்பையும் வைத்திருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அவர்கள் காலத்து அரசியல் ஆரோக்கியமாகவும் மதிக்கத் தக்கதாகவும் திகழ்ந்ததற்கு அவர்களைப் போன்ற அறிய தலைவர்கள் இருந்தது ஒரு காரணம். அவர்கள் வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும், இன்றைய இளைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் தலைவர்கள் யாவரும், இந்தச் சொற்களையும் கருத்துக்களையும், தங்கள் வசதிக்கேர்ப்பத் திரித்துக் கொண்டு ஊழல் மலிந்த வோட்டுப் பொறுக்கும் அரசியலுக்குப் பயன்படுத்துவது வேதனையிலும் வேதனை. மக்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும், பழம் பெரும் தலைவர்களையும் அவர்களுடைய கருத்துக் களையும் மேற்கோள் காட்டும் இவர்கள், ஏனோ தங்கள் நடைமுறையில் மட்டும், அக்கருத்துக்களை ஒதுக்கி வைப்பது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கின்றது. மக்கள், தங்கள் கையில் இருக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பயன் படுத்தி, இது போன்ற தீய சக்திகளுக்கு சாவு மணி அடிக்காத வரையில், இன்று நாம் கண்டு கொண்டிருக்கும் ஜனநாயக அவலங்கள் தொடர் கதையாகவே போய் விடும். சிந்திப்பார்களா மக்கள்?

- கலைபிரியன்

No comments: