என்னை நானே அறிமுகம் செய்தல் - எனக்குத் தெரியாது!!! எழுத்தும் பேச்சும் என்றென்றும் என்னைப் பிரியாது!!! என்னைத் தேடும் ஒரு முயற்சி தான் இந்தக் குவியல் - ஆம் - என் இன்டர்நெட் கிறுக்கல்!!!
வங்கே... பழகுவோம்யா...
வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!
Followers
Sunday, February 6, 2011
Friday, February 4, 2011
கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்...
கேரளாவில், அந்தக் காலத்திலேயே, பாமாயில் ஊழல், ராசாவுடன் தொலை தொடர்பு செயலாளரா இருந்து ஸ்பெக்ட்ரம் விசாரணையை ஆரம்ப காலத்திலேயே முடக்க முயற்சி செய்தது, மேலும், இப்படிப் பலப் பல "நல்ல" தகுதிகள் வாய்ந்தவரை, அதே ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரித்து வரும் "சிபிஐ"க்கு பொறுப்பான, சக்தி வாய்ந்த, "விஜிலன்ஸ்" துறையின் தலைவராக நியமித்து, "கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்" என்ற புது நடைமுறையைக் கையாண்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த நியமனத்தைச் செய்யும் பொறுப்பு, பிரதமர் (மன்மோகன் சிங்), நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் (சுஷ்மா ஸ்வராஜ்) மற்றும் உள்துறை அமைச்சர் (ப. சிதம்பரம்) ஆகிய மூவர் அடங்கிய குழுவுக்கு உள்ளது. மேற்கூறிய பிரச்சனைகளைக் குழுவில் தான் எழுப்பி, நியமனத்தை எதிர்த்ததாக, சுஷ்மா சொல்கிறார். அவ்வாறிருந்தும், அவரையே நியானம் செய்வது என்பது ஜனநாயகத்தை இன்றளவும் நம்பும் நெஞ்சங்களை ஈட்டி கொண்டு குத்துவதாக அமைந்துள்ளது. மாற்றுக் கட்சி உறுப்பினர்களை ஒருங்கே கொண்டு செயல்படும் முறை தேய்ந்து வரும் இந்தக் காலத்தில், இது போன்ற நியமனங்களிலாவது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். சோனியாவின் ஆலோசகர்களான வின்சன்ட் ஜார்ஜும், அகமது படேலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வற்புறுத்தி, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வைத்துள்ளார்கள் என்றொரு செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியப் படுகிறது. நாட்டின் சிறந்த அறிவு ஜீவிகளில் இருவர், அதுவும் அவ்வளவு சக்தி வாய்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பவர்களே, தனிப் பட்டோரின் விருப்பு வெறுப்பிற்குப் பணிந்து செயல்படுகிறார்கள் என்றால், அவர்களின் கீழ் பணிபுரியும், லட்சக் கணக்கான அதிகாரிகள் எப்படி செயல்பட முடியும், அன்றாடம், நம் நாட்டில். இதில் வல்லரசாகப் போகிறோம் என வாய் கிழியப் பேச்சு வேறு. இப்படிப் பட்ட ஒரு சர்ச்சை மிக்க நியமனத்துக்கு, ஒப்புதலும் அளித்து, அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஜனாதிபதி, இருந்தும், இல்லாததற்குச் சமம். அவர் நம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக இருந்தாலும், அதை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. சுப்ரீம் கோர்ட், சில மாதங்களாக, தனது சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது, இந்த அரசுக்கு எதிராக, இது போன்ற விவகாரங்களில். தாமதமாக நடந்தாலும், அந்த உயரிய நீதி ஆலயமாயினும், சட்டத்தின் மாண்பையும், ஜனநாயகத்தின் மேன்மையையும் உயர்த்திப் பிடிக்கும் என நம்புவோம்.
- கலைபிரியன்

நீ வருவாய் என...
தோன்றுவாய் நீ எனத்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
தடவிச் செல்லுதடா...
"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?
- கலைபிரியன்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
தடவிச் செல்லுதடா...
"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?
- கலைபிரியன்
Thursday, February 3, 2011
தமிழக மீனவர் நிலை!!! ஆட்சியாளர்களுக்கு சில கேள்விகள்...
செய்தி - 'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.
கண்ணோட்டம் - கச்சத் தீவு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டதால்தானே இன்றும் ஈழத்துச் தமிழச்சி மட்டுமல்லாமல், என் தாயகத்தில் உள்ள தமிழச்சியும், அன்றாடம், தாலி அறுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது!!! இன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டு, என்ன, தமிழகத்துக்கே இலங்கைக் கடற் படையினர் வந்து கொலை செய்துவிட்டுச் செல்ல வழி வகுக்கப் போகிறார்களா? அமெரிக்கர்களுக்கும் சீனர்களுக்கும் சற்றும் சளைக்காத, மனித வளத்தைக் கொண்டு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகப் பறந்து விரிந்து கிடக்கும் இம்மண்ணில், என் மீனவ நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? ரேஷன் அட்டை கிடையாதா? என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? பரம எதிரி நாடான பாகிஸ்தானோ, ஏன், பங்களாதேஷோ கூட செய்யத் துணியாத காரியத்தைச் செய்ய, சுண்டைக்காய் தேசமான இலங்கைக்கு எப்படி வந்தது தைரியம்? நம் மீனவன் தமிழ் பேசுகிறவன் என்ற ஒரே காரணத்தினால் தானே இந்தக் கேவலமான கொலை பாதகச் செயலை செய்யத் துணிகிறான் அந்த இன வெறியன்? அவனுடன் கொஞ்சி விளையாடி ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்வது இந்தியாவுக்கும், அதன் குடிமக்களான எமக்கும் நீங்கள் இழைக்கும் வெட்கக் கேடான, துரோகச் செயல் இல்லையா? இப்படிப் பட்ட இழி நிலைக்குப் பின், நாம் வல்லரசாக மாறினால் என்ன? மாறாவிட்டால்தான் என்ன? தமிழ் செம்மொழியானால் மட்டும், தமிழன் மேன்மை அடைந்துவிட்டான் என்று படம் காட்டலாம் என்று எண்ணமா? இதை விட மேலும் கேவலமான எவ்வளவோ கேள்விகளைக் கேட்கத் தோன்றினாலும், இறையாண்மைக்கு உண்மையில் மரியாதை கொடுத்து, என் இடுகைப் பதிவை அழுக்காக்கிக் கொள்ள விரும்பாமல் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...

உன் விரலோரக் கவிதைகள்!!!
உன் விரல்களிலிருந்து
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!
- கலைபிரியன்
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!
- கலைபிரியன்
Wednesday, February 2, 2011
நம்ம ராஜாவுக்குத் (CMமுக்குத் தான்) திரும்பிய பக்கமெல்லாம் செக்...
1. மத்திய ஆட்சி முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், தொகுதிப் பங்கீட்டில் முறைத்துக் கொண்டு, அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து விட முடியாது, அப்படியே வந்து விட்டாலும், ராஜாவுக்கு ஆப்புத் தான் (நான் ஆ. ராசாவைச் சொன்னேன், நீங்க வேற... மூத்த தமிழறிஞரைப் பத்தி அப்படிச் சொல்ல முடியுமா... சொன்னால், நமக்குப் புரியாமல், அவருக்கு மட்டுமே புரிந்த தமிழில், முரசொலியில் நம்மளைப் பத்திக் கவிதை எழுதுவார்... நமக்கேன் வம்பு...).
2. காங்கிரசிடம் பிகு செய்வதற்காக, பாமக நம்மக்கிட்ட இருக்குன்னு சும்மானாச்சுக்கும் சொல்லிவச்சு, டாக்டர் அய்யா காண்டாயி மறுப்புத் தெரிவித்து விட்டார். வயசுக் கோளாறுல, அவரு மேல கோபப் பட்டு, "கூட்டணியில் அவர்கள் சேர வாய்ப்பில்லைன்னு" வேற சொல்லிட்டாரு. ராசாவைக் கைது செஞ்சு காங்கிரஸ் பேரம் பேச ஆரபிச்சதும், வடிவேலு ஸ்டைல்ல "அய்யய்யோ, வட போச்சே"ன்னா, யாரு என்ன பண்ண முடியும்...
3. காங்கிரஸ் கோச்சுக்குட்டு போயி கேப்டனோட மூணாவது அணி கச்சேரி வச்சா, அந்தம்மா, டாக்டரை வளைச்சுப் போட்டுக்குச்சுன்னா, அண்ணாவின் தம்பியும், சிறுத்தைகளும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் நிற்கறதுக்கு ஆள் தேடுறதுக்குள்ள, தாவு தீந்து போகும்...
4. இது பத்தாதுன்னு, "மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் தான் இடி, நமக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்குகிற மாதிரி இடி மேல் இடி"ன்னு, குடும்பத்துல எல்லா சைடுலேருந்தும் ஏகத்துக்கு குத்து விழுகுது...
87 வயசுல இதெல்லாம் ஆவுற கதையா? இவரு வயசுக்கு இருந்திருந்தா, சாணக்கியரே ஒதுங்கி ஓய்வெடுத்துக்கிட்டு இருப்பார்... இவர்னால, அந்தக் கருமத்தையும் எடுக்க முடியாம, ப்ச், பாவமாத் தான்யா இருக்கு...
நம்ம ஆட்சியில, நெடுஞ்செழியனுக்கு (அண்ணாவுக்குப் பின்னாடி, அவரு ஒதுங்கி நமக்கு வழி விட்டாரேங்குற ஒரே மரியாதைக்காவது...) மெரினா பீச்ல இடம் ஒதுக்கி இருந்தா, அந்தம்மாவவது, நமக்கு இடம் ஒதுக்குவது பத்திப் பரிசீலிக்கலாம், இப்ப அதுக்கும், "அய்யய்யோ, வட போச்சே" கத தான்...

யார் ஊனம்!!!
உண்மை பேச மறுப்பவன், "நா" இருந்தும் "ஊமை"...
சூழ்ச்சிக்கு செவிமடுப்பவன், "காது" இருந்தும் "செவிடன்"...
கேடுகளை மட்டுமே காண்பவன், "கண்கள்" இருந்தும் "குருடன்"...
ஓடி ஆடி உழைக்காதவன், "கை கால்கள்" இருந்தும் "ஊனமுற்றவன்"...
"ஊனமுற்றவன்" என்று நாம் யாரைப் பார்த்துச் சொல்லித் திரிகிறோமோ,
உண்மையில், அவனே, இறைவனின் ஞானம் பெற்றவன்...
அவன் தான் மனதில் ஈரமும், மானமும் ஒருங்கே உள்ளவன்...
அவனிடம் கருணை கொண்டு, இனியாவது வாழ்வோம், ஊனமில்லாதவர்களாய்!!!

Subscribe to:
Posts (Atom)