வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 2, 2011

தேர்தல் - 2011 - பிணம் தின்னிக் கழுகுகள் வருகுது, பராக், பராக்!!!

கர்ம வீரர் கரம் பற்றி, இவர்கள்
கடமை ஆற்றிய கதையெல்லாம்...
காலமெல்லாம் மறந்திருப்போர், தூசி
தட்டித் துடைத்தெடுப்பார்... "வெண் தாடி
வேந்தர்" என்றும், "வைக்கம் வீரர்" என்றும்,
மேடையேறிப் புகழ்ந்திடுவார், தனிமையில்
இவர் திட்டித் தீர்த்த தந்தைப் பெரியாரை...
"பொன்மனச் செம்மலின் மறுபதிப்பே, தான் தான்"
என்று போகுமிடமெல்லாம், தற்பெருமை
பேசிடுவார், தம்பட்டம் அடித்திடுவார்...
பேரறிஞரின் பாசறையில், இவர் பக்குவமாய்ப் பயின்ற கதை,
பாரெங்கும் பரைந்திடுவார், பின்பு bar எங்கும் பருகிடுவார்...

முகமூடி அணிந்து இவர் முரசு அறைவது, முற்றும்
பொய் என்று புரியும் நமக்கு... சூரியச் சின்னம் காட்டிச்
சூறை ஆடுவோர் இவரென்றும், இலை மறை,
காய் மறை ஊழல் புரிவோர் இவரென்றும், கை
தேர்ந்த கயவர்கள் இவர்கள் தானென்றும், மாம்பழமாய்
இனிக்கப் பேசி மயக்கிட வல்லோரென்றும் - இவ்வளவும்
நன்றாகத் தெரிந்திருந்தும், "ஏமாறுவது என் பிறப்புரிமை"
என்று, இன்னும் எத்தனை நாள் தான் வாழ்வதாய் உத்தேசம்?
உன் கண் முன்னால் அழிகிறது உன் தேசம்...
விழிப்புடன் வரவேற்போம் பிணம் தின்னிக் கழுகுகளை...
விவரமாய் விரட்டிடுவோம், பணம் கொத்தும் பருந்துகளை...
ஓட்டுக்கு விலை வைத்தால், சீட்டுக்கு வேட்டு வைப்போம்...
உறுதியுடன், நம் ஊர் காக்கப் புறப்படுவோம், வாருங்கள்!!!

உன் உளம் பகரும் ஒருவனுக்கு ஓட்டுப் போடு...
அல்லது, "ஜெமினி" ஸ்டைலில் "ஓ" போடு, 49 "ஓ" போடு...
ஆக மொத்தம், வீணாகக் கூடாது உன் ஓட்டுரிமை...
பாழாகக் கூடாது உன் சந்ததியின் ஏட்டுரிமை!!!

- கலைபிரியன்

2 comments:

ராஜ நடராஜன் said...

கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்குது.பாசக்கார தமிழ் புள்ளைக மனோபாவம்தான் எப்படின்னு தெரியல.

Nathan Ram said...

பாஸ்... 80% வாக்குப் பதிவு மட்டும் வந்துட்டா, யாராலையும் கணிக்க முடியாமப் போயிடும்... படிப் படியாத் திருந்தித்தானே ஆகணும்... அங்க வர்றதுக்கு, ஏதோ நம்மால ஆனா சின்ன முயற்சி...