வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Sunday, February 13, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் - மௌனம் கலைப்பாரா பிரதமர்?


ஸ்பெக்ட்ரம் விவகாரம், இன்று, ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும், எவ்வளவு விரிவாக அலசி ஆராயப்பட்டாலும், இவ்விஷயத்தில், பிரதமர், அளவுக்கதிகமாக மௌனம் சாதிப்பது, மிகவும் நெருடலாக உள்ளது. தன் தலைமையில் இயங்கி வரும் அமைச்சரவையின், ஒரு முக்கியமான அமைச்சர் மீது அசாதாரணமான குற்றச்சாட்டு சுமத்தப் படுகிறது. நாடாளுமன்றமே, ஒரு கூட்டத் தொடர் முழுமைக்கும், தனது அலுவல்களைச் செய்ய முடியாத அளவுக்கு, இவ்விவகாரத்தை எதிர்க் கட்சிகள் அனைத்தும் கிளப்புகின்றன. தன்னுடைய ஆலோசனையை மீறி, ஒரு அமைச்சர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முடிவெடுத்து, அதனை நியாயப் படுத்தித் தனக்கு பதில் எழுதுகிறார். அந்தக் கடிதத்துக்குக் கூட, ஒரு மாத காலம் பதில் எழுத முடியாமல், தாமதமாக எழுதிய பதிலில் கூட ஒரு விளக்கம் கூடக் கோர முடியாமல் அவரது கை கட்டப் படுகிறது. தன் அமைச்சரவையில், யார், எந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப் பட வேண்டும் என்பதை, தன்னைத் தவிர யாரெல்லாமோ அலசி ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் (அருண் ஷோரி), தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏதோ ஒரு பெரிய தவறு நடப்பதாக உணர்ந்து, ராஜ்ய சபா வளாகத்தில் பிரதமரைச் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தங்களை எச்சரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதாகவும், அதற்காகத் தங்களின் செயலாளரை என்னிடம் அனுப்புயனால், தனக்குத் தெரிந்த விஷயங்களை, ஆதாரப் பூர்வமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் அவரிடம் கூறியதாகத் தெரிவிக்கிறார், ஊடகம் வாயிலாக. இரண்டு ஆண்டுகளாக, இவ்வளவு தூரம் முன்னேறியுள்ள இந்தப் பூதாகாரமான விஷயத்தில், பிரதமரின் அசாத்தியமான மௌனம், அவர் மீது ஒரு பெரிய சந்தேக நிழலை உருவாக்கி இருக்கிறது. தன் மீது படிந்திருக்கின்ற அந்த நிழலை, விரைவில் மக்கள் முன், ஊடகங்கள் வாயிலாகத் தோன்றிப் பிரதமர் விவரமான விளக்கங்கள் அளிப்பதன் மூலமே அகற்ற முடியும். அந்தப் பொறுப்பும், கடமையும், அவருக்கு உள்ளது என்பதை அவரால் மறுக்க முடியாது. செய்வாரா பிரதமர்? செய்ய விடுவார்களா, அவரைக் கட்டிப் போட்டிருப்போர்?

- கலைபிரியன்

1 comment:

ரங்குடு said...

மன்மோஹன் சிங் ஒரு பெருங்காய டப்பா என்பது இதுவரை நமக்குப் புரியாதது ஆச்சரியம்.

எப்போதோ, யாருடைய தயவிலோ உலக வங்கியில் ஒரு அதிகாரியாகப் பொறுப்பேற்றவர்
மன்மோஹன் சிங். அத்தகைய பொறுப்புக்கள் 'அரசியல்' ரீதியாக வழங்கப்படும் பொறுப்பு.
உண்மையான தகுதியின் அடிப்படையில் வழங்கப் படுவதில்லை.

காங்கிரசுக்கும், சோனியாவுக்கும் தங்கள் சுரண்டும் வேலைக்கு தோதாக வளைந்து கொடுக்கக்
கூடிய ஒரு நபர் தேவைப்பட்டது. அதற்கு மன்மோஹன் சிங்கைப் பயன் படுத்திக் கொண்டார்கள்.

காலப் போக்கில் 'பதவி வெறி' பிடித்து மன்மோஹன் சிங்கும் அவர்களின் ஊழலுக்கும் சுரண்டலுக்கும்
வளைந்து கொடுத்துக் கொண்டு தற்போது ராசாவின் ஊழலிலும் சும்மா இருக்கிறார்.

அதற்கு ஏற்றார்போல் அவரது காதும் டர்பன் கொண்டு இருக்கி மூடப்பட்டுள்ளது.