வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, February 24, 2011

கலைஞருக்கு வகுப்பு எடுப்பாரா ப. சி?

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

வருவாய்க்கு உண்டான திட்டங்களையும், வரி விதிப்புகளையும் இயற்றி, அதனை முறையாகச் செயல்படுத்துவதன் மூலம் வருவாய் ஈட்டி, ஈட்டிய வருவாயைத் திறமையுடன் கையாண்டு சேமித்து, சேமித்த பணத்தைக் கொண்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் திட்டங்களை வகுப்பதுவே, ஒரு சிறந்த அரசின் இலக்கணம் என்பது வள்ளுவம் நமக்கு இயம்பும் கருத்து. இக்குறளைத் தனது முதல் பட்ஜெட் உரையின் போது, நாடாளுமன்றத்தில் வாசித்தார் இன்றைய மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதித் துறை அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள்.

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், இன்றைய முதல்வர் கருணாநிதி இலவசங்களை வாரி வழங்குவதாகத் தனது தேர்தல் அறிக்கையில் கூறி, அதன் பேரில் கூட்டணி வெற்றி பெற்று மைனாரிட்டி ஆட்சி அமைந்ததும், பொருளாதார அதி மேதாவி ப. சிதம்பரம், "கருணாநிதியின் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதா நாயகன்" என்று கூட்டணித் தலைவரை வானளாவப் புகழ்ந்து தள்ளினார். ஒரு வேளை, அவ்வாறு செய்தால் மனமிரங்கி, முதல்வர் காங்கிரஸ்சுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார் என்றொரு எண்ணமோ, என்னவோ? அது பலிக்கவும் இல்லை. இலவசங்களை வாரித் தான் வழங்கினார் முதல்வர். அதில் ஒன்றும் மாற்றமில்லை. இதோ, அடுத்த தேர்தலும் வந்து விட்டது. மாநில பட்ஜெட்டை சில நாட்களுக்கு முன்னால் வாசித்தார் மாநில நிதி அமைச்சர் (டம்மி) க. அன்பழகன். 2004, இந்த அரசு பொறுப்பேற்கும் போது 58,000 கோடி சொச்சமாக இருந்த தமிழ் நாட்டின் கடன் சுமை, இன்று 1,01,000 கோடி சில்லறைகளாக இருப்பதாகக் கூறிப் பேரிடியைத் தமிழக மக்கள் நெஞ்சங்களில் இறக்கினார்.

அன்று, குறள் பாடி நாடாளுமன்றத்தில் ஒரு அரசின் இலக்கணத்தைப் பறைசாற்றிய ப. சி, தான் புகழ்ந்த தேர்தல் அறிக்கையால், இன்று துவம்சமாகிப் போன தமிழக நிதிச் சுமைக்கு பொறுப்பானவர்களிடம், தன் கட்சி சார்பாகக் கூட்டணி பேரம் நடத்தும் குழுவில் இயங்கிக் கொண்டிருக்கிறார். கூட்டணி பேரத்துடன் சேர்த்து, அவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தையும், அதனை நிர்வகிக்க வேண்டிய அரசின் செயல்பாடுகளையும் பற்றி வகுப்பெடுத்தால் சிறப்பாக இருக்கும். எடுப்பாரா ப. சி?

- கலைபிரியன்

2 comments:

bandhu said...

ப.சி. நிதி அமைச்சராக தோல்வியுற்றவர்! அவர் என்னமோ Fiscally Responsible மாதிரி நம்ம ஊர் Fiscally Irresponsible -க்கு கிளாஸ் எடுக்கணுமா? தேவை தான்!

Nathan Ram said...

Bandhu, ப. சி நிதி அமைச்சராகத் தோல்வியுற்றவர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை... அவர் கொண்டு வந்த VDIS (Voluntary Disclosure of Income Scheme), வேறு எந்த நிதி அமைச்சரும் பெற்றுத் தராத வருமானத்தை இன்றளவிலும் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது...